ஜெனிவா விவகாரம்! நட்பு நாடுகளுடன் கைகோர்க்கும் மகிந்த

ஜெனிவா விவகாரத்தினை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது பேசிய அவர், “ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம்.

இதுகுறித்து நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் இம்மாதம் மார்ச்சில் இடம்பெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இல்லை.

இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளமை காரணமாக இலங்கை விவகாரம் குறித்து ஜெனிவாவில் பேசப்படாது என எதிர்பார்கின்றோம்” என்றார்.