ஜம்முவிற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக அமைதி பேரணி; பிரிவினைவாத அமைப்புகள் அறிவிப்பு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஷேர் இ காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலை கழகம் அமைந்துள்ளது. இங்கு இந்த வாரம் 6வது பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜம்முவிற்கு செல்கிறார். இந்நிலையில், சையத் அலி ஷா கிலானி, மீர்வாயிஜ் உமர் பரூக் மற்றும் முகமது யாசின் உள்ளிட்ட பிரிவினைவாதிகள் இணைந்து பொது மக்களுக்கு அமைதி பேரணி ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதன்படி, மே 19ந்தேதி லால் சவுக் நோக்கி பேரணி நடத்தப்படும். இதுபற்றிய முடிவு கிலானியின் இல்லத்தில் இன்று நடந்த பிரிவினைவாத தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY