ஜப்பான் பேரரசரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜப்பானுக்கான விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை அந்த நாட்டின் பேரரசர் அகிஹிதோவை சந்தித்துள்ளார்.

டோக்கியே நகரில் உள்ள இம்பீரியஸ் மாளிகையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்திற்கு தனது மகிழ்ச்சியை வௌிப்படுத்தியுள்ள ஜப்பான் பேரரசர், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல காலமாக நிலவிவரும் பலமான உறவு இந்த விஜயத்தின் மூலம் மேலும் பலம் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முதலீட்டு மாநாடு ஜப்பானில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பிரியல் ஹோட்டலில் இன்று பிற்பகல் இந்த மாநாடு நடைபெற்றது.

LEAVE A REPLY