ஜப்பானில் இலங்கையர் கடத்தல் – ஏழ்வர் கைது!

arrestஜப்பானில் இலங்கையர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் ஏழ்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

30 வயதான இலங்கையர் ஒருவர் ஜப்பான் நாட்டில் தான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் 14ம் திகதி கடத்தப்பட்டுள்ளார்.

மேலும் கடத்தல்காரர்கள் அவரை விடுவிக்க 3.18 மில்லியன் யென் நிதி கோரியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இரு வாரங்களுக்குள் பணத்தை வழங்கவில்லையாயின் அவரைக் கொன்று விடுவதாகவும் கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் அந்த நாட்டு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கடத்தப்பட்ட இலங்கையர் மீட்கப்பட்டார்.

எனினும் இதற்காக நிதி வழங்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் 23 – 36 வயதுக்குட்பட்ட மூன்று இலங்கையர்களும் நான்கு ஜப்பானியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY