ஜப்பானிலுள்ள இலங்கை பௌத்த விகாரைகளின் தலைமை தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி

ஜப்பானிற்கு அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானில் அமைந்துள்ள இலங்கை பௌத்த விகாரை தலைமை தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) டோக்கியோ நகரில் இடம்பெற்றது.

பௌத்த மதத்தின் மேம்பாட்டிற்காக ஜப்பானிலிருந்து குறித்த தேரர்கள் ஆற்றிவரும் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதியை சந்திக்க கிடைத்தமைக்கு மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

இளம் தலைமுறையினருக்கு எமது கலாசார விழுமியங்களை தெளிவுபடுத்தி அவர்களை சிறந்த விழுமியப் பண்புகளையுடைய தலைமுறையாக கட்டியெழுப்ப வேண்டியதன் தேவை குறித்து இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி, சமயத் தலைவர்களுக்கு இதில் பாரிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY