ஜப்பானின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் விஜயம்!

ஜப்பானின் முடிக்குரிய இளவரசர் நரூஹிடோவின் பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதனை சிறப்பிக்கும் முகமாக இன்று (வியாழக்கிழமை) இரவு ஈஃபுல் கோபுரத்தில் விஷேட வானவேடிக்கைக் காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று பிரான்ஜை சென்றடைந்த ஜப்பானின் முடிக்குரிய இளவரசரை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அரச மரியாதையுடன் வரவேற்றார். பிரான்ஸின் 14ஆவது சுன் கிங் லவுஸ் மன்னனின் அரண்மனையான வேர்சைலீஸ் மாளிகையில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குறித்த மாளிகையில் இருதரப்பு கலந்துரையாடல், மேடை நிகழ்வுகள், இரவுநேர விருந்துபசாரம் என நேற்றிரவு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜப்பான்-பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான உறவானது 160 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் இரு நாடுகளும் இணைந்து இவ்வாறான சந்திப்பு மற்றும் விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.