ஜப்பானிடம் தோற்றது இலங்கை!!!

18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் ரக்பி போட்டியின் எழுவர் அரையிறுதிப் போட்டியில் இலங்கை ஜப்பானிடம் 10 – 12 என்ற ரீதியில் தோல்வியடைந்துள்ளது.

இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி இதுவரையில் எந்தவொரு பதக்கத்தையும் வெற்றிகொள்ளாத நிலையில் நேற்று நடை பெற்ற ரக்பிப் பிரிவுப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 36-0 என்ற கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி முன்னேறியது.

நேற்று முன் தினம் ஆரம்பமான ரக்பிப் போட்டிகளில இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரெட்ஸை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் அபாரமான வெற்றியை ஈட்டிக்கொண்ட இலங்கை அணி இரண்டாவது போட்டியில் கொரியாவிடம் விழ்ந்தது.

இந் நிலையில் நேற்று இரண்டு போட்டிகளில் இலங்கை அணி விளையாடியது. இதில் முதலாவதாக நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடியது. பெரிதும் சோபிக்காத அணியான ஆப்கானிஸ்தானை 36-0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதேவேளை இரண்டாவது போட்டியில் இலங்கை அணி சீனாவை எதிர்த்தாடியது. இதில் கடும்போட்டியை சந்தித்த இலங்கை அணி 17-12 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை எதிர் கொண்ட எழுவர் அடங்கிய இலங்கை அணி ஜப்பானிடம் 10 -12 என்ற ரீதியில் தோல்வியடைந்துள்ளது.