ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் இடையில் தற்சமயம் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

தேர்தல் வாக்களிப்பு, வாக்குகளை எண்ணும் பணிகள் மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவித்தல் என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16ஆம் திகதி (நாளை மறுதினம்) இடம்பெறவுள்ளதுடன், தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்றுடன் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.