ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு அரசுக்கு ஏற்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் சட்ட செலவினங்களைச் மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்ரீமாவட்ட நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக அங்கொடை மனநல ஆய்வகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மனுதாரர் அதில் கோரியிருந்தார்

இதில் பொலிஸ் மா அதிபருடன் கோட்டை தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் எதிர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதிக்கு மனநலக் கோளாறு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்செல் எனும் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.