ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு இன்று விஜயம்

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளின் ஏற்பாடுகள் தொடர்பில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் சென்று நேரடியாக பார்வையிட்டதுடன், இவருடன் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் மாவட்ட அராசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர், போதைப் பொருள் எதிர்ப்பு வாராத்தின் சின்னமாக ஜனாதிபதி தலைமையில் பாடசாலை போதை எதிர்ப்பு வாராமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஆரம்ப நிகழ்வாக இன்று வள்ளுவர் சிலையின் நிழலில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் முக்கியாமான கொள்கையில் ஒன்று தான் போதைக்கு எதிரான போராட்டம் இந்தநாட்டில் போதைப்பொருள் விற்பனையும் பாவனையும் மட்டுமல்லாமல் போதைப்பொருளின் மையமாக இலங்கை மாறிக்கொண்டிருக்கின்றது என்ற கசப்பான உண்மையினை நாங்கள் உணர வேண்டும்.

அந்த உண்மைக்கு எதிராக பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்வதும் இளைஞரை பெரிய அபாயத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்வது எங்களின் அரசியல் கலாச்சார சமூக பொறுப்பாக இருக்கின்றது அதன் முதல் அடியாகத்தான் நாளைக்கு இந்த நிகழ்வு நடக்கின்றது.

இதற்கு உதவி செய்யும் அரச அதிபர் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

வட மாகாணத்தில் இருந்து தான் போதைப்பொருள் கடத்தப்படுகின்றது அல்லது நாட்டுக்குள் வருகின்றது என்ற குற்றச்சாட்டு பொருத்தப்பட்டுள்ளது.

அரசாங்க உத்தியோகாத்தர்கள் என்ற வகையில் இந்த சவாலினை எதிர்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் கருத்தாக இருக்கின்றது என்று வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.