ஜனாதிபதி பதவி கட்சி, ஆட்சிக்கு அப்பாற்பட்டது: மனுதாக்கல் செய்த பின் ராம்நாத் பேட்டி

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 20 முதல்-மந்திரிகள் முன்னிலையில் இன்று மனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் புடைசூழ ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியான பாராளுமன்ற தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தார்.

இதையடுத்து முன்மொழிபவர்கள், வழிமொழிபவர்களின் மனுக்கள் வழங்கப்பட்டன. இதற்கான குழுவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இடம் பெற்றிருந்தனர்.

மனுதாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராம்நாத் , “நான் கவர்னர் ஆனது முதல், எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் அல்ல. ஜனாதிபதி பதவி கட்சி, ஆட்சிக்கு அப்பாற்பட்டது.

எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உயர் மதிப்புடைய ஜனாதிபதி அலுவலகத்தின் மான்புக்கு ஏற்ப என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுவேன்” தெரிவித்தார்.

LEAVE A REPLY