ஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் நாட்டின் தலையொழுத்தை மாற்றும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தாலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.