ஜனாதிபதி தலைமையில் சுதந்திரக்கட்சி கூட்டம் – ஒரே கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பாக பேச்சு!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது அடுத்துவரும் தேர்தலில் ஒரே கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த மாகாண சபை தேர்தலில் பொதுஜன பெரமுனாவின் வேட்பாளர்கள் மொட்டு சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.