ஜனாதிபதி கொள்கை பிரகடனத்தை செயற்படுத்த சுதந்திர கட்சி ஆதரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ´சுபீட்சத்தின் நோக்கு´கொள்கை பிரகடனத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவளிப்பதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 17 பிரபல கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்டணியாக கட்டியெழுப்பப் பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேர்தலில் போட்டியிட தேவையான சின்னத்தை காட்டிலும் மேலும் சில விடயங்கள் உள்ளதாக தெரிவித்த அவர், அந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.