ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் நீதிமன்றில் சரண்!

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே.வீரசிங்க கொழும்பு நிரந்தர நீதாய நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

அலி ரொஷனின் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களும் நாளை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக உறுதியளித்ததை அடுத்து பிடியாணை திரும்ப பெறப்பட்டது.

இதேவேளை இன்றைய விசாரணையின்போது, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தமது செயற்பாடுகளில் தலையிட நீதிமன்ற அதிகாரம் இல்லை என சட்ட மா அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.