ஜனாதிபதியை சந்தித்தார் ரஷ்ய இராணுவ தளபதி!

ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் இற்கும் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜெனரல் ஒலேக்குடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 03ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர், 72வது தேசிய சுதந்திர தின விழாவில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.