ஜனாதிபதியைப் பலவீனப்படுத்தினால் பேரழிவு நிச்சயம்! – மிரட்டுகிறார் தயாசிறி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பலவீனப்படுத்தினால் பாரிய அழிவு ஏற்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், சில தரப்பினர் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து ஜனாதிபதி மைத்திரியை பலவீனப்படுத்தினால் அதன் ஊடாக பாரியளவு அழிவுகள் ஏற்படக் கூடும். இதனால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரியை கரத்தைப் பலப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியை பலப்படுத்துவதன் மூலம் நாட்டை சரியான பாதைக்கு இட்டுச்செல்ல முடியும். எனினும் சில சூழ்ச்சிகளைச் செய்து ஜனாதிபதியை பலவீனப்படுத்தினால் அதன் நலன்களை வேறு தரப்பினர்கள் பெற்றுக்கொள்வார்கள் என தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY