ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற உரைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் அநீதியான விமர்சனம் வருத்தமளிப்பது மாத்திரமன்றி அது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதமொன்றிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர் தொடர்பான விசாரணைகள் குறித்து ஜனாதிபதி மனித உரிமைகள் ஆணைக்குழுவை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதிகளின் நலன்களை கண்காணிப்பதும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் ஆணைக்குழுவின் முக்கிய செயற்பாடுகளில் ஒன்று என மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.