ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் – மஹிந்த நம்பிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என திர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரங்களை இன்று (திங்கட்கிழமை) ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ” மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஆசிர்வாதத்துடனே வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளோம்.

அரசாங்கத்தின் கடந்த நான்கரை வருட நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டே நாட்டு மக்கள் அரசியல் ரீதியிலான தீர்மானங்களை முன்னெடுப்பார்கள். அந்தவகையில் தேர்தலின் வெற்றியை நிச்சயம் கைப்பற்றுவோம்.

தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் எவ்வித மறுப்பும் இன்றி இணக்கம் தெரிவித்துள்ளோம். சுயாதீனமான முறையில் தேர்தல் இடம்பெற்றால் மாத்திரமே நாட்டு மக்கள் தமக்கான தலைவரை தெரிவு செய்வார்கள்.

எந்நிலையிலும் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பாடுகளுக்கு ஆணைக்குழு இடமளிக்காது” என மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.