சோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்!

i3.phpசோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்!

நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுலுக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று, கர்நாடகாவை சேர்ந்த அக்கட்சி உறுப்பினர் தனது “சுண்டுவிரலை” வெட்டி வழிபாடு செய்து இருக்கிறார்.

கர்நாடகாவிலுள்ள ராமநகரைச் சேர்ந்தவர் இந்துவாலு சுரேஷ். 35 வயதான காங்கிரஸ் கட்சி உறுப்பினரான இவர், அக்கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் ஜாமீன் கிடைப்பதில் இருப்பதி அறிந்து, டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அவர்களை விசாரனைக்கு நீதிமன்றத்திற்க்கு அழைத்தபொழுது தனது இடதுகை சுண்டு விரலை வெட்டிக்கொண்டார்.

அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தால், திருப்பதி ஏழுமலையானுக்கு தன் விரலை காணிக்கையாக்குவதாக கூறிய சுரேஷ், குடும்பத்தினரிடம் கூட இதை தெரிவிக்காமல் தன் நண்பரை உடன் அழைத்துக் கொண்டு திருப்பதி சென்று ஆயிரம் ரூபாய் தாளில் தன் விரலை வைத்து, அதனுடன் அவர்களுக்கு ஜாமீன் அளித்ததற்க்கு இறைவனுக்கு ஒரு நன்றி கடிதத்தை இணைத்து கோயில் உண்டியலில் அதை செலுத்தியதாகவும் கூறினார்.

இதைப்பற்றி அவரிடம் கேட்ட பொழுது”என் விரலை வெட்டிக்கொள்ளும் பொழுது எனக்கு வலி தெரியவில்லை, சிறிது நேரம் கழித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் கார் ஏசி கம்ப்ரெஸ்ஸரை பழுது பார்க்கும் பொழுது என் விரலை இழந்ததாக கூறிநேன்” என்றார்.

அமைச்சர் M.H.அம்பரீஷ் இதைபற்றி அறிந்து சுரேஷை தனது இல்லத்திற்க்கு அழைத்து சந்தித்ததாக தெரிகிறது. அவர் சுரேஷிடம் “நீ கலியுகத்தின் ஏகலைவன், ஆனால் வலியோடு கூடிய வேண்டுதல்கள் தேவைப்படாது” என கூறியதாகவும் தெரிகிறது.

LEAVE A REPLY