செயலாளரை தீர்மானிக்கும் அதிகாரம் சஜித்திடம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நிறுவப்படவுள்ள கூட்டணியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்கபெற்றது வெற்றியெனக் கருதுவதாக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைத்துவம் அவருக்கு கிடைக்காவிட்டாலும், கூட்டணியின் தலைமைத்துவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதால், கூட்டணிக்கான செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகயை தீர்மானிக்கும் அதிகாரம் சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்கு ஐ.தே.க எம்.பிக்களாலேயே ​தனக்கு எதிராக போலிப் பிரசாரம் செய்யப்படுகின்றது என்றும் சாடினார்.