சென்னை விமான நிலையத்தை அலறவைக்கும் ரஜினியின் ‘கபாலி’ !

Kabali-Shooting-Spot-480x480விநாயகர் சதுர்த்தியன்று ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படப்பூஜை சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் நடத்தினர்.

பெரும்பாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரஜினி சூட்டிங்கை நடத்துவதில்லை. ஆனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஸ்பெஷல் அனுமதி பெற்று அங்கு படப்பிடிப்பை நடத்தினார்கள்.

இதனையறிந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு கூடிவிட்டனர். ரஜினியை கண்டதும் அவர்கள் ஆரவாரம் செய்தார்கள். பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினியும் அவரது மகளாக நடிக்கும் தன்ஷிகாவும் வெளிநாட்டுக்கு புறப்பட்டு செல்வது போன்ற காட்சியை படமாக்கினார் ரஞ்சித். பயணிகள் வேடத்தில் துணை நடிகர்கள் நடித்தார்கள்.

இந்நிலையில் ‘கபாலி’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய அன்று ஆந்திராவில் 2 பெரிய நட்சத்திரங்களின் தெலுங்கு படங்களுக்கும் தொடக்க விழா நடைபெற்றது. ஆனால் அந்த இரண்டு தெலுங்கு படங்களை விட, ‘கபாலி’ படத்தை வாங்குவதில்தான் தெலுங்கு விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் கொஞ்சம் பயந்தபடியே உள்ளார்களாம்.

 

 

kabali-shooting-spot-still_144318299300

CPxBUw3UwAAnv1g

kabali-shooting-spot-still_144317268700

kabali_ol006

 

LEAVE A REPLY