சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்தது

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 18ந்தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது. இதனை தொடர்ந்து இவற்றின் விலை இறங்கு முகத்தில் இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 15 காசுகள் குறைந்து ரூ.81.46க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.77.24க்கு விற்பனையாகிறது.