சூதாட்டத்தில் ஈடுபட்ட தென்ஆப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டு விளையாட தடை

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் சோட்சோபே.

33 வயதான இவர் 2014-ம் ஆண்டோடு சர்வதேச போட்டியை முடித்துக் கொண்டார்.

சோட்சோபே உள்ளூர் போட்டியில் மட்டும் விளையாடி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு தென் ஆப்பிர்காகவில் நடந்த உள்ளூர் 20 ஓவர் போட்டியில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. முதலில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அவர் பின்னர் அதை ஒப்புக்கொண்டார்.

விசாணையின் முடிவில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக சோட்சோபேக்கு 8 ஆண்டு விளையாட தடை விதித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்க உள்ளூர் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக தடை விதிக்கப்பட்ட 7-வது வீரர் ஆவார். இதற்கு முன்பு குலாம் போடி, அல்வீரோ பீட்டர்சன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.

சோட்சோபே ஒரு நாள் போட்டி தரவரிசையில் ‘நம்பர் 1’ பந்து வீச்சாளராக இருந்தவர் ஆவார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்தது. இதனால் அவர் இனி உள்ளூர் போட்டியிலும் விளையாட இயலாது.

LEAVE A REPLY