சு.க. வேட்பாளர்களை ஆதரிக்க யாழ். வருகிறார் ஜனாதிபதி

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாண நகரில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று ஜனாதிபதி உரையாற்றுவார் என சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY