சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக், திருகோணமலைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயத்தின்போது திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு சென்ற அவர், ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக விவசாயம், கல்வி, அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்யும் நடவடிக்கைகளுக்கு இதன்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.