சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம்

சுவிட்ஸலாந்து நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று (13) கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

குறித்த சந்திப்பு இன்று மதியம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த சந்திப்பில் சுவிட்ஸலாந்து உயர்தானிகர், சுவிட்ஸலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY