சுவிஸ் தூதருடன் திலக் மாரபன முக்கிய சந்திப்பு!

இலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் மாரபன மற்றும் இலங்கைக்கான சுவிஸ் தூதர் ஹேன்ஸ்பீட்டர் மோக் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இருதரப்பு விடயம் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுவிஸ் தூதர் ஹேன்ஸ்பீட்டர் மோக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் ஹேன்ஸ்பீட்டர் மோக், “இதன்போது இலங்கை – சுவிஸ் இருதரப்பு விடயம் மற்றும் பன்முக ஒத்துழைப்பு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது” என பதிவிட்டுள்ளார்.