சுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்ததினம் அனுஸ்டிப்பு

சுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்ததினம் வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் உப தலைவர் சு.குமாரசாமி தலைமையில் விவேகானந்தரின் சிலைக்கருகில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.