சுயாதீன ஆணைக்குழு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு தொடர்பில் தற்போதைய நிலையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊவ பரணமக பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அந்த ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகள் தொடர்பில் தற்போதைய நிலையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழு அரசியல்வாதிகள் மற்றும் வேறு அரச சார்பற்ற நிறுவனங்களில் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டதாக என்பது தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.