சுமந்திரனால் சிறையில் வாடும் 20 முன்னாள் போராளிகள்: அம்பலமாகியது உண்மைகள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ சுமந்திரனின் பாதுகாப்பு காரணமாக 20 முன்னாள் போராளிகள் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

97 அரசியல் கைதிகளே தடுப்பில் உள்ளதாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பாலும் , ஈ.பி.டி.பியினராலும் அரசிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது 106 அரசியல் கைதிகள் தடுப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீது தாக்குதல் நடாத்த சதியில் ஈடுபட்டதாக கூறி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 15 முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ளனர்.

இதேவேளை 2017ஆம் ஆண்டு தை மாதம் 13 ஆம் திகதி சுமந்திரன் மீது தாக்குதல் நடாத்த சதியில் ஈடுபட்டதாக 05 முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளது.

இவ்வாறாக 20 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டள்ளனர். இவர்களில் நான்கு பேர் அங்கவீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சிங்கள ஊடகத்தில் செவ்வி வழங்கிய அவர், முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக்கொள்ள தானே பிரயத்தனம் மேற்கொண்டதாகவும் ஊடகங்களில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.