சுதந்திர தின விழாவில் மஹிந்த பங்கேற்கமாட்டார்: கமல் பத்மசிறி

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டாரென உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மஹிந்தவின் பிரத்தியேகச் செயலாளர் உதித் லொக்குபண்டார, உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்ற ரீதியில் மஹிந்தவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கமல் பத்மசிறி கூறியுள்ளார்.

இதேவேளை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.