சுதந்திர தின நிகழ்வுக்கு செல்லாத சிறிசேன

இன்று இடம்பெற்ற இலங்கையின் 72வது சுதந்திர தின விழாவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகள் காரணமாக அவர் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.