சுதந்திர கட்சியின் தீர்மானம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுமா? இல்லையா? என்பது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (16) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.