சுதந்திரதினத்தின் பெயர் மாற்றப்பட்டமைக்கு ஆட்சேபனையில்லை –கபீர் ஹாசீம்

சுதந்திரதினத்தின் பெயர் தேசிய தினமென மாற்றப்பட்டமைக்கு ஆட்சேபனை இல்லையென அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரதினம் தேசிய தினமென பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிற, அர்த்தமும் செயற்பாடுகளும் ஒன்றுதான் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ளன.

சுதந்திர தின கொண்டாட்டங்களை தேசிய தின கொண்டாட்டமாக அறிவிக்கவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.