சுதந்திரக் கட்சியினர் நால்வருக்கு அமைச்சர் பதவி?

அமைச்சர்களாக நியமிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பெயர்களை, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், சிறிலங்கா அதிபருக்கு அனுப்பவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியினர் சிலரை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்க சிறிலங்கா அதிபர் இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அவர்களில் விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஸ்மன் செனிவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரே அமைச்சர்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.