சுகாதாரத் துறையினரின் அனுமதி கிடைக்காமையினால் விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்!

விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவரையில் இறுதித்தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ​முதல் விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் அதுகுறித்த இறுதித்தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான பயணச் சேவைகளை வழமைப்போன்று முன்னெடுப்பதற்காக, சுகாதாரத் துறையினரின் அனுமதி இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.