சீன ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் விலகல்

சீன ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 3ம் தேதி பெய்ஜிங்கில் தொடங்குகிறது. ஆனால் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்த தொடரில் இருந்து, உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் விலகியுள்ளார்.

இந்த தொடரில் ஜோகோவிச் 6 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஜோகோவிச் கூறுகையில், சீன ஓபன் எனது விருப்பமான தொடர்களில் ஒன்று.

இந்த ஆண்டு சீன ஓபனில் விளையாட முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது. முழங்கை காயத்தில் இருந்து மீண்டு வருகிறேன்.

இதில், முன்னேற்றம் ஏற்படும் வரை விளையாட வேண்டாம் என எனக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது என்றார். இதேபோல் மகளிர் பிரிவில் உலகின் 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், தோள்பட்டை காயம் காரணமாக சீன ஓபனில் இருந்து விலகியுள்ளார்.

LEAVE A REPLY