சீன அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அந்நாட்டு பிரதிநிதிகள் ஆராய்வு

சீன நிதி உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காக சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று சமீபத்தில் நாட்டுக்கு வருகை தந்திருந்தது.

சீன நிதி உதவி திட்டத்தின் கீழ் வைத்திய உபகரணங்கள், மருத்துவ மாணவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் MRI ஸ்கேனர் இயந்திரம் ஒன்று ராகம போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கான கட்டடம் மற்றும் பொலன்னறுவை சீன இலங்கை நட்புறவு தேசிய விசேட தொழில்துறையினரின் வைத்தியசாலைக் கட்டடம் ஆகியன சீன நிதி உதவியின் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றது.

இவற்றையும் இக் குழுவினர் பார்வையிட்டனர். பொலன்னறுவை சீன இலங்கை நட்புறவு தேசிய விசேட தொழில் துறை வைத்தியசாலை கட்டட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜீலை மாதம் நிறைவடையவிருப்பதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய திட்டங்களை குறிப்பிட்ட தினங்களில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக இவர்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளனர். சீன சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் அலுவலகத்தின் உப தலைவர் உள்ளிட்ட 11 பேர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.