சீனாவின் வான்வெளியில் பறந்த இந்திய ஆள் இல்லாத விமானம் விழுந்து நொறுங்கியது

இது குறித்து மேற்கு தியேட்டர் போர் பீரோவின் துணை இயக்குனர் சாங் ஷுலி சின்ஹாவா செய்தி நிறுவன செய்தியை மேற்கோள் காட்டி கூறியதாவது:-

சமீபத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. ஆனால் சரியான இடம் தெரியவில்லை. இந்தியா “சீனாவின் பிராந்திய இறையாண்மையை மீறி உள்ளது என்று கூறினார்.

சீன செய்தி தொடரபாளர் ஜாங் சீன எல்லைப் படைகள் நடத்திய ஆய்வில் ஆள் இல்லாத விமானம் விண்வெளியில் பறந்து நொறுங்கியது என்பதை உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் எங்கள் வலுவான அதிருப்தி மற்றும் எதிர்ப்பு நாட்டின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதியுடன் பாதுகாப்பதாக இருக்கும் என கூறினார்.

சீனா மற்றும் இந்தியா பூட்டான் எல்லையில், டோம்லங் பீடபூமியில் சாலையை விரிவுபடுத்த சீன முயற்சி எடுத்ததாக ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சி்க்கல் ஏற்பட்டது. இரு நாடுகளும் இடையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இந்த சம்பவம் உறவுகளை மேலும் மோசமாக்கி உள்ளது. சீனாவின் இந்த கூற்றுக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை.

LEAVE A REPLY