சீசெல்ஸ் நோக்கி பயணமானார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 3 நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீசெல்ஸ் நோக்கி இன்று பயணமானார். இன்று அதிகாலை 2.10 மணி அளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL 707 என்ற விமானத்திலேயே ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் பயணம் மேற்கொண்டனர். இந்த விஜயத்தின் ​போது அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்பதற்கு சீசெல்ஸ் ஜனாதிபதி மாளிகையில் விஷேட நிகழ்வொன்று இடம்பெற உள்ளது.