சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் சிறிதரன் விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி – முல்லைத்தீவு சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வட.மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்பள்ளிகளை படையினர் நடத்தக் கூடாது என்ற விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தனர்.

இதனால் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் விட்டு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கிடையில் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக இன்றைய கலந்துரையாடலில் குறித்த பிரதேசங்களில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக பணியாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.