சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட பூஜை நடந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நயன்தாரா இதற்கு முன்னதாக வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது.

சீமராஜா படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் ராஜேஷ் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வாசம் படத்தில் பிசியான நயன்தாரா ஜூன் கடைசியில் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY