சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடக்கும் கொடூரம்!

அனுராதபும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றையதினம்(13.04.2018)பார்வையிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், யாழ் மாநகர உறுப்பினர் வ.பார்த்திபன், சட்டத்தரணி வி.திருக்குமரன் உள்ளிட்ட குழுவினர் நேற்றறையதினம் காலை அனுராதபுரம் சிறையில் கைதிகளைச் சந்தித்துள்ளனர்.

இதன்போது இராச வள்ளல் தபோறூபன் , மதியரசன் சுலக்சன் உள்ளிட்ட 07 அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளனர்.

அரசியல் கைதியான இராசவள்ளல் தபோறூபன் கடந்த சில நாட்களாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவருகின்றார்.

சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி கடந்த நான்கு வருடங்களாக தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தபோறூபன் தன்னை பொதுச் சிறைக்கு மாற்றுமாறு கூறியே உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

தான் சிறையில் மோசமாக நடத்தப்படுவதாகக் கூறியிருக்கும் அரசியல் கைதியான தபோறூபன் குறித்த சிறைக் கூடத்துக்குள்ளேயே வாளி ஒன்றினுள் இயற்கைக் கடன்களைக் கழிப்பதாகவும் தினமும் ஒரு தடவை மட்டுமே அவற்றினை சுத்தப்படுத்த தன்னை வௌியே அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY