சிறுவர்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம்; ஆனால் சட்டநடடைிக்கை இல்லை

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவர் கிளிநொச்சி தொண்டமான் நகர் பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு முன்னால், பாடசாலை மாணவர்கள் 50 பேரை இணைத்துக் கொண்டு நேற்றைய தினம் தேர்தல் பிரச்சார நிகழ்வொன்றை நடத்தியுள்ள போதிலும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மக்கள் சந்திப்பின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் வரை கலந்து கொண்டுள்ளதுடன், இதன்போது சத்தமான ஒலுபெறுக்கிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் தௌிவான தேர்தல் சட்ட மீறல்கள் என்ற போதிலும் ஏனைய அரசில் கட்சிகளோ அல்லது அதிகாரிகளோ சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY