சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்: நவாஸ் ஷெரீப் உறுதி

201511112120358925_Sharif-vows-to-protect-minority-rights_SECVPF.gifசிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகள் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் நிலையில், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் அநீதி இழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.

கராச்சியில் உள்ள கவர்னர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, இந்து மத பிரநிதிகள் சந்தித்தனர். அப்போது, அவர்களிடம் தனது அரசு சிறுபான்மையினர் உரிமைகளை காப்பதில் மிகுந்த உறுதியுடன் இருப்பதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

இது குறித்து நவாஸ் ஷெரீப் கூறுகையில், பாகிஸ்தான் அனைத்து மக்களுக்குமான நாடு. பாகிஸ்தான் மக்கள் அனைவருக்கும் நான் பிரதமர். எந்த மதம், எந்த சாதியை சேர்ந்தவர் என்பது ஒரு விஷயம் அல்ல. ஒரு முஸ்லீம், இந்துவுக்கு எதிராக அநீதி இழைத்தால், அவர் என்னிடம் வரலாம். அநீதி இழைத்த முஸ்லீமுக்கு எதிராக நான் கடும் நடவடிக்கை எடுப்பேன். அனைத்து மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மையின மக்களுக்கு நீதி வழங்குவதான் இஸ்லாமில் ஒரு அரசாங்கத்தின் கடமை” என்றார்.

தெற்கு சிந்து மாகாணத்தில் இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படும் பிரச்சினைக்கு எதிராக பாராளுமன்றத்திலும் வெளியேயும் இந்து சமூகத்தினர் போராட்டம் நடத்திய நிலையில் நவாஸ் ஷெரீப்பின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY