சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் ஐ.நா குழு சந்திப்பு

ஐ.நா அமைதிகாப்புப் படையின் காவல்துறை தெரிவு மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் தலைவர் அடா யெனிகுன் தலைமையிலான ஐ.நா அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினரை உள்ளீர்ப்பது தொடர்பாக நிலவும் தடைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.