சிறிலங்கா பயணத்தை ரத்துச் செய்தார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

பாதுகாப்புக் காரணங்களால், சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா முகமட் குரேஷி ரத்துச் செய்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா முகமட் குரேஷி நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருந்தார்.

சிறிலங்காவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையிலேயே பாதுகாப்புக் காரணங்களால், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், கொழும்புக்கான பயணத்தை ரத்துச் செய்திருக்கிறார்.