சிறிலங்கா பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமனம்v

சிறிலங்காவின் பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை சீனாவுக்குப் பயணமாகியுள்ளதை அடுத்தே, பதில் பாதுகாப்பு அமைச்சராக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன பதவியேற்றுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, ருவன் விஜேவர்த்தனவை பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.