சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்

இரண்டு இந்திய வங்கிகள் சிறிலங்காவில் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளன. அக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியனவே சிறிலங்காவில் உள்ள தமது கிளைகளை மூடவுள்ளன.

இந்த இரண்டு வங்கிகளும் தமது நிதி நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதற்கு, சிறிலங்கா மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது.

தாய் வங்கிகளிடம் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

வங்கிகளின் செயற்பாடுகளை முடித்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இந்த வங்கிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ரத்துச் செய்யப்படும்.

பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது உட்பட வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரண்டு வங்கிகளும் இனி அனுமதிக்கப்படாது.